குறைந்த வட்டியில் மூன்று லட்சம் வரை நிதி உதவி:
மிக மிகக் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே கிசான் கிரடிட் கார்டு திட்டம் ஆகும்.
இந்தத் திட்டத்தில் விவசாயம் தொடர்பான பணிகளுக்கு கடன் வழங்கப்படும், மேலும் கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் காலம் நீட்டிக்கப்படும்.
இந்த கடனை பெற விவசாயிகளுக்கு தேவையான தகுதிகள்:
- சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும்.
- சுய உதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்பு குழுவின் உறுப்பினர் போன்றவர்களுக்கும் இந்தத் திட்டத்தில் பங்கு பெறலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் மீன்வளம், கால்நடை வளர்ப்பிற்கான கடன் தேவைகளை விவசாயிகள் குறுகிய கால கடன்கள் மற்றும் உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம்
இந்தத் திட்டத்தை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்
அணுக வேண்டிய வங்கிகள்:
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (state bank of india)
- ஆக்சிஸ் வங்கி
- பஞ்சாப் நேஷனல் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- பாங்க் ஆப் இந்தியா
- எச்டிஎப்சி வங்கி
- ஐ டி பி ஐ வங்கி.
விண்ணப்ப படிவ மாதிரி
விண்ணப்ப படிவம் தேவை படுவோர் கமென்ட் செய்யவும்
"நமது வலைத்தளத்தை பார்த்ததற்கு நன்றி. விவசாயிகளின் கஷ்டங்களை மதிக்கும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி."
"இந்த தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்குமென நம்புகிறோம். மற்றவர்களுக்கும் பயன்பட இப்பதிவைப் பகிருங்கள். மேலும் புதுப்பிப்புகளுக்கு நம்முடன் தொடர்ந்து இருங்கள்!"
Comments
Post a Comment